தேனிகல்லீரலை எடுத்துக்கொண்டு வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நிருவி என்ற பெண் மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில் அவரது உறுப்புகளை கணவர் தானம் செய்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து அவரது உறுப்புக்கள் எடுக்கப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மதுரைக்கு கல்லீரலை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்க்கு சாலையில் போக்குவரத்து காவலர்கள் சாலையில் போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.