தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று இறுதி கட்டப் பிரச்சாரத்தை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் நாராய ணதேவன்பட்டியில் நிகழ்த்தினார். இந்த பிரச்சாரத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், தங்கதமிழ்ச்செல்வன் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.