தேனி தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 5 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களாக தீச்சட்டி மற்றும் மாவிளக்குகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.