ஆண்டிபட்டி ஒன்றியம் ஜம்புலிபுத்தூரில், பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாக சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.