தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவரிடம் அறிமுகமான வீரன் என்பவர் தனக்கு தெரிந்தவரிடம் தங்க பிஸ்கட் இருப்பதாகவும் அதனை வாங்கி புதிய மாடலில் நகை செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சுந்தர் ரூ. 74.75 லட்சத்தை பல தவணைகளில் 5 பேரிடம் வழங்கிய நிலையில் அவர்கள் ஏமாற்றினர். இதுகுறித்த புகாரில் குற்றப்பிரிவு போலீசார் ரேவதி, பூமிகா, வீரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்