தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மதுபானக்கூடம் பொதுமக்கள் போராட்டத்திற்கு பின்பு அகற்றப்பட்டது. இந்த நிலையில் அதே இடத்தில் மீண்டும் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதை கண்டித்து, பெரியகுளம் ஜமாத்தார்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இணைந்த பெரியகுளம் டிஎஸ்பி கீதாவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.