தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு, 20% போனஸ் மற்றும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று 11ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.