கடமலைக்குண்டு அருகே சுவரில் பைக் மோதியதில் ஒருவர் பலி

53பார்த்தது
கடமலைக்குண்டு அருகே சுவரில் பைக் மோதியதில் ஒருவர் பலி
கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் நேற்று (செப். 5) இரு சக்கர வாகனத்தில் செங்குளம் நோக்கி சென்றனர். இரு சக்கர வாகனத்தை கார்த்திக் ஓட்டிச் சென்றார். ஓட்டணை அருகே சென்ற போது கட்டுப்பாடு இழந்த இருசக்கர வாகனம் ரோட்டின் ஓரத்தில் இருந்த வீட்டின் சுவரில் மோதியது. பலத்த காயம் அடைந்த கார்த்திக் உயிரிழந்தார். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி