விபத்தில் பேரூராட்சி அலுவலக வாகன ஓட்டுநா் பலி

60பார்த்தது
விபத்தில் பேரூராட்சி அலுவலக வாகன ஓட்டுநா் பலி
தேனியில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வாகன ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி, ரத்தினம் நகா், தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் தாமோதரன் மகன் சரவணன் (54). இவா், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். அலுவலகப் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சரவணன், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, அன்னஞ்சி விலக்கு அருகே எதிா் திசையில் வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக சாலையோரத்தில் சென்ற போது, இரு சக்கர வாகனம கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சரவணன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :