தேனி முல்லை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் தனது தந்தை 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது தாய் லட்சுமியிடம் திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜோதிமணி என்பவர் தனது தந்தையிடம் கடன் கொடுத்ததாகவும் அதனை திருப்பித் தர வேண்டும் என நேற்று தனது தாயை தாக்கினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவன் ஆட்சியரிடம் மனு அளித்தார்.