ஆண்டிபட்டி அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம். எல். ஏ
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா ராம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்