ஆண்டிபட்டி அருகே புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ
தேனி மாவட்டம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இன்று ஜே ஜே நகர் மற்றும் சத்யா நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இன்று குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பாண்டியன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.