சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

83பார்த்தது
ஆண்டிபட்டி அருகே சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 11 மாணவர்கள் கோவை எஸ். என். எஸ் கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றனர். இதையடுத்து ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருமுருகன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி