நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ 1200 ரூபாய்க்கு ஏலம் போன மல்லிகை பூ இன்று ஒரு கிலோ 3200 ரூபாய் வரை ஏலம் போனது. கனகாம்பரம் பூ ஆகியவை ஒரு கிலோ 1500 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் வரத்து குறைந்தாலும் விலை அதிகரிப்பால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.