ஆண்டிபட்டி அருகே சட்டமன்ற பொது நிறுவன குழு தலைவர் ஆய்வு எம்எல்ஏ பங்கேற்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ. பி. நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காற்றாலை மின் உற்பத்தி எவ்வளவு உற்பத்தி ஆகிறது. மெகாவாட் மின்சாரம் அளவை மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.