ஆண்டிபட்டி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

60பார்த்தது
ஆண்டிபட்டி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா உத்தரவின் படி மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் ராகவன் ஆலோசனையின் பேரில் ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் மற்றும் பணியாளர்களுடன் பாலிதீன் பைகள், தடைசெய்யப்பட்ட புகையிலை, காலாவதியான பொருள்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக அரசு தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் மற்றும் புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.

தொடர்புடைய செய்தி