தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தனியார் மூலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு மீன்கள் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இன்று (ஜூன் 01) கோடை விடுமுறையின் கடைசி நாள் என்பதால் மீன்கள் வாங்குவதற்கு அதிக அளவு பொதுமக்கள் குவிந்தனர். கட்லா, ரோகு, ஜிலேபி, சொட்ட வாழை போன்ற மீன்களை மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.