தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் ஐந்தாவது வார்டு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காலை மர்ம நபர்கள் தீ வைத்ததால், குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.