தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி
ஆண்டவர் புரத்தில் முகைதீன் ஆண்டவர் நகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கம்பம் நகராட்சி 11வது வார்டு உறுப்பினர் கம்பம் சாதிக் உணவு பரிமாரினார். அருகில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் இருந்தனர்.