தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகின்றது.
இந்த ஆட்டோ ஸ்டாண்டின் அருகில் ஒரு சிலர் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துள்ளனர். அந்தப் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து மோதிக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.