தேனி: துரத்திச் சென்ற எஸ்எஸ்ஐ தடுமாறி விழுந்து பலி

3574பார்த்தது
தேனி: துரத்திச் சென்ற எஸ்எஸ்ஐ தடுமாறி விழுந்து பலி
தேனியில் சந்தேகத்துக்குரிய நபரை தூரத்திச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சாலையில் தடுமாறி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ரெங்கசாமி (54). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், தேனியில் வெள்ளிக்கிழமை இரவு நேர ரோந்துப் பணியில் இருந்த ரெங்கசாமி, அல்லிநகரம் காவல் நிலையத்திலிருந்து தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தன்னுடன் ரோந்துப் பணியிலிருந்த 2 காவலா்களுடன் தேனி, சொக்கா் தெருவுக்குச் சென்றாா்.

இங்கு சந்தேகத்துக்குரிய வகையில், சென்று கொண்டிருந்த நபா் ஒருவரைப் பிடித்து விசாரிப்பதற்காக அவரை ரெங்கசாமி துரத்திச் சென்றாா். அப்போது, ரெங்கசாமி நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். இதில் அவருக்கு மாா்பில் வலி ஏற்பட்டதால் சக காவலா்கள் அவரை தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரெங்கசாமி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி