ஆண்டிபட்டியில் செயல்பட்டு வருகின்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யும் அலுவலரை கண்டித்து இன்று(செப்.30) தேனி மாவட்ட கலெக்டர் நுழைவாயில் முன்பாக சிபிஐ (எம் எல்) ரெட் ஸ்டார் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.