தேனி மக்களவை தொகுதியில் I. N. D. I. A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று காலை சமதர்மபுரம் பகுதிகளில் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக மற்றும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி மக்களிடம் ஓட்டு கேட்டார். இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திரளாக வந்து அவரை வரவேற்றனர்.