தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த 65 வயதான மனோகரன் என்பவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறினார். அவர் குமுளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன், மனோகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தார்.