ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஒரு போக பாசன நிலங்களுக்கு கடந்த சில நாட்களாக முறை பாசனத்தின் படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக ஒருபோக பாசனத்திற்கும், குடிநீருக்கும் சேர்த்து 569 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜனவரி 10) 1219 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.