தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரம் குன்னூர் பகுதியையொட்டியுள்ள அரப்படித்தேவன்பட்டி, திருமலாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட வைகை ஆற்றோர பகுதிகளில் விவசாயிகள் கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, கோவில் திருவிழா ஆங்காங்கு நடப்பதால் சுவாமிகளுக்கு மாலைகளாக இதனை சேர்த்து வைத்து கட்டுவதற்கு பயன்படுவதால் வியாபாரிகள் கோழிக்கொண்டை பூக்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.