தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர், ராஜகோபாலன்பட்டி கிராம பகுதிகளில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் உரிமையாளர்கள் காளைகளுக்கு பருத்தி விதை, புண்ணாக்கு, வாழைப்பழம், பேரிச்சம்பழம் என சத்தான உணவுப் பொருட்களை அளித்து வருவதோடு நடை பயிற்சி, ஈரமண்ணில் கொம்பு குத்தும் பயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை காளைகளுக்கு தீவிரமாக அளித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வருகின்றனர்