மூணாறு அருகே கல்லாறு என்னும் இடத்தில் இருந்து ராஜாங்கம் என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்று தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பழனிசெட்டிபட்டி அருகே உள்ள குமுளி - பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.