ஆண்டிபட்டியில் 44 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை

64பார்த்தது
ஆண்டிபட்டியில் 44 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு ஜெகதீசன் என்பவர் நிர்வாக அலுவலராக உள்ளார். இதே ஆலையில் 44 வயது பெண் இளநிலை உதவியாளராக பணிபுரிகின்றார். இந்த பெண், ஜெகதீசன் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக, க. விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் நேற்று (மே 31) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி