மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் கூடக்கோயில் கண்மாய்கரை பகுதியில் உள்ள பைரவர் திருக்கோவிலில் நேற்று (மார்ச் 22) மாலை தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனர். வழிப்பாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.