வசந்த் & கோ கடையில் திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய திருடன்

69பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வசந்த் & கோ கடை செயல்பட்டு வருகிறது. அங்கு இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த திருடன் கைவரிசை காட்டியுள்ளார். அடுத்தநாள் இந்த திருட்டு சம்பவம் நடந்ததை அறிந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், கடையில் இருந்த ரூ.93,443 பணம், 16 தங்க நாணயங்கள் மற்றும் 40 வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளித்தனர். அதன் பேரில், கடையில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி