சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது. உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக மோஷன் கேப்ச்சர் (Motion capture) தொழில்நுட்பம் மூலம் இவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் ரோபோவுக்கு Iron First King என்ற பட்டம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.