உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா உலக சாதனையை முறியடித்துள்ளது. மகா கும்பமேளாவின் முதல் 2 நாட்களில் 5.15 கோடி மக்கள் புனித நீராடினர். மகா கும்பமேளாவின் முதல் நாளில் 1.65 கோடி பேர் நீராடினர். மகர சங்கராந்தி நாளில் 3.50 கோடி பேர் நீராடினர். பாரம்பரிய ஆன்மீக நிகழ்ச்சித் திட்டம் எந்தவித வன்முறையும் இல்லாமல், சாதி அல்லது மதம் சார்ந்து இல்லாமல், யாரையும் புண்படுத்தாமல் தடையின்றி தொடர்கிறது.