தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிச. 28) அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து நினைவிடத்தில் நடந்த குருபூஜையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் பெண் ஒருவர் தேயிலை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது, கேப்டன் விஜயகாந்த்தின், “அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே” என்ற பாடலை கண் கலங்கியபடி பாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.