கொல்கத்தாவில் பெண் மருத்து மாணவி ஒருவர் ஆப் மூலம் பைக் பயணத்தை பதிவு செய்துள்ளார். அதன் பேரில் அந்த பைக் சரியாக லொகேஷனுக்கு வந்தடைந்தது. அப்போது, அப்பெண் சில காரணத்திற்காக பயணத்தை ரத்து செய்துள்ளார். இதனால், கடுப்பான பைக் ஓட்டுநர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் பைக் ஓட்டுநர் ராஜு தாஸ் (41) என்பவரை கைது செய்தனர்.