ஆந்திரா: கடந்த 2023இல் எரிந்த நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலில் திருநங்கையின் சடலம் என போலீசார் சந்தேகித்த நிலையில் அது திவ்யா (20) என்ற பெண்ணின் சடலம் என தெரிந்தது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். தற்போது 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவி தேஜா (30) என்பவரும் திவ்யாவும் காதலித்த நிலையில் வேறு பெண்ணை அவர் மணக்க முயன்றார். இதுகுறித்த சண்டையில் திவ்யாவை 2 நண்பர்களுடன் சேர்ந்து கொன்று எரித்தது உறுதியானது.