ஊட்டிக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 24.60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லத்தை இன்று திறந்து வைத்தார். தனது பயணம் குறித்து அவர் X பக்கத்தில், "பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன். உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது!" என்று கூறியுள்ளார்.