குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை விட சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் தமிழகம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் 39,699 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் 4,81,807 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு தொழிலாளிக்கு 1.75 மனித நாட்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி தமிழகம் சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா 1.13 நாட்களும், குஜராத் 1.37 வேலை நாட்களையும் வழங்குகிறது.