குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 2 வயது குழந்தை மீது கார் ஏறி இறங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இரண்டரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமி மீது பார்கிங்கிலிருந்து வெளியே சென்ற மெர்சிடிஸ் கார் ஏறி இறங்கியுள்ளது. கார் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி, சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கவலைக்கிடமான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.