சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியல் மாபெரும் வெற்றிபெற்றது. ரசிகர்களிடம் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் இன்று முதல் (டிச.23) ஒளிபரப்பாகிறது. முதல் பாகத்தில் நடித்த நாயகி மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் நடிக்கின்றனர்.