கொளுத்தும் வெயில்.. குளிர்விக்கும் மழை

62பார்த்தது
கொளுத்தும் வெயில்.. குளிர்விக்கும் மழை
தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17) 4 இடங்களில் 100°F-க்கு மேல் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரூர் பரமத்தி, வேலூரில் தலா 101°F வெயிலும் திருப்பத்தூர், சேலத்தில் தலா 100°F வெயிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி, கோவை, விருதுநகர், ராஜபாளையம், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி