கர்நாடகாவின் தர்மஸ்தலத்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி, பல ஆண்டுகளாக பலரது உடல்களை ரகசியமாக புதைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் உட்பட பலரது உடல்களை புதைத்துள்ளதாக போலீசில் அந்த நபரே நேரில் சென்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை செய்ய மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிலர் அச்சுறுத்தி வருவதாகவும், அதற்கு பயந்து செய்ததாகவும் கூறியுள்ளார். உரிய பாதுகாப்பு அளித்தால் இதற்கு காரணமானவர்கள் பற்றி தகவல் தருவதாக தெரிவித்துள்ளார்.