தமிழ் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், மேடையில் அநாகரீகமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் பொது மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் கூறுகையில், “மிஷ்கினுக்கு இதுவே வேலையாகிவிட்டது.' என நடிகர் விஷால் கூறியுள்ளார். இளையராஜாவை மிஷ்கின் ஒருமையாக பேசியிருந்த நிலையில், இளையராஜா கடவுளின் குழந்தை என்றும், அவரை அவன், இவன் எனப் பேசுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் விஷால் கூறினார்.