ஆந்திர மாநிலம், கடப்பாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான கோரிக்கையை முன்வைத்தார். "நாட்டில் உள்ள அனைத்து உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் ஒழிக்கப்பட வேண்டும். ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை முழுமையாக ஒழிக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மட்டுமே ஊழலை குறைக்க முடியும். பிரதமர் மோடி உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த வேண்டும்'' என்றார்.