சென்னை தேனாம்பேட்டையில் உணவகம் நடத்தி வருபவர் கெனிட்ராஜ். இவர், மந்தைவெளிஆட்டுக்குட்டி சபையில் போதகராகவும் உள்ளார். இந்த சபைக்கு செல்லும் திருமணமான 26 வயது இளம்பெண், கெனிட்ராஜை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். அப்பெண்ணிடம் உனது உடலில் கெட்ட ஆவி புகுந்துள்ளதாக கூறி கெனிட்ராஜ் தனது வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டியுள்ளார். அங்கு சென்றபோது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்து தப்பி தனது கணவரிடம் கூறி போலீசில் புகார் அளித்த நிலையில், போதகரை கைது செய்தனர்.