பூமியில் இருப்பதை விட விண்வெளிக்கு சென்ற பிறகு விண்வெளி வீரர்களின் உயரம் இரண்டு அங்குலம் வரை அதிகரிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம்..! இதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. அங்கு புவியீர்ப்பு விசை இல்லாததே உயரம் அதிகரிப்புக்கு காரணமாகும். புவியீர்ப்பு விசை பற்றாக்குறையால் வீரர்களின் முதுகெலும்பில் மாற்றங்கள் ஏற்படும். அது தற்காலிக உயரம் அதிகரிப்புக்கு காரணமாகி விடுகிறது.