அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில், "FIR வெளியானதற்கு இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சிசிடிஎன்எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம். காவல்துறை காரணம் அல்ல. இவ்விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.