பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அரியலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, “பாமகவிற்குள் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியை பொருத்தவரை பாமக ஒரு சக்தி, ஆனால் பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நமக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நமது கூட்டணியோடு சென்று தேர்தலை சந்திப்போம். தளபதியை முதல்வர் ஆக்குவது நமது கடமை" என தெரிவித்துள்ளார்.