முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்பி அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். வக்ஃப் சொத்துக்களை நேர்மையாகப் பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிளுக்கு பஞ்சர் போட்டு வாழும் நிலை வந்திருக்காது என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஓவைசி, RSS தேச நலன்களுக்காகப் பாடுபட்டிருந்தால், பிரதமர் சிறுவயதில் டீ விற்றிருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.