இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாட்கள் அரசுமுறை பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். இன்று (ஜூன் 20) அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டேராடூனில் உள்ள பார்வை குறைபாடு மாணவர்களுக்கான கல்வி நிறுவனத்தில் மாணவர்களின் இசை நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்தார். அப்போது, மாணவர்களின் பாடல் திறனை கண்டு மெய்மறந்துபோனவர், ஒருகணம் மனம் தளர்ந்து கண்கலங்கினார். இதன் காட்சிகள் வைரலாகி வருகின்றன.